சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு – பாதுகாப்பு பணியில் 16,000 போலீசார்
சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 1519 விநாயகர் சிலைகள் இன்று கடற்கரையில் கரைக்கப்படுகின்றன. சுமார் 16,000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பட்டினப்பாக்கம், நீலாங்கரை, புது வண்ணாரப்பேட்டை மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





