நத்தம் பேரூராட்சியில் நாளை முதல் 20 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு..!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் நாளை முதல் 20ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டங்களிலும் தற்போது பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதனை கருத்தில் கொண்டு தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் நாளை முதல் 20ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று கட்டுப்படுத்த நத்தம் பேரூராட்சியில் மற்றும் கிராமப்பகுதிகளில் முழு ஊரடங்கு அமலாக உள்ளது.
பால் மற்றும் மருந்து கடைகள் வழக்கம் போல செயல்படும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஊரடங்கிற்கு அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.






