சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கா..!
கொரொனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது அங்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சீனாவின் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள பைல்ஸ் நகரில் தற்பொழுது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் நகரத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நகரத்தில் சுமார் 35 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். வியட்நாம் எல்லையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சைஸ் நகரில் கடந்த வாரம் புத்தாண்டு முடித்து வீடு திரும்பிய ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதையடுத்து அடுத்தடுத்த நாட்களில் 70-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து இதன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் தேவையில்லாமல் வெளியே வர முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் துணை மேயர் தெரிவித்துள்ளார்.






