காவலர் உடல் தகுதி தேர்வில் எடையை கூடுதலாக காட்ட 4 பேண்ட் அணிந்த வந்த பெண்..!
புதுச்சேரியில் காவலர் உடல் தகுதி தேர்வில் உடல் எடையை கூடுதலாக காட்டுவதற்காக 4 பேண்ட் அணிந்து வந்த பெண் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். புதுச்சேரி காவல் துறையில் காலியிடங்களை நிரப்புவதற்காக உடல்தகுதி தேர்வு நடந்து வருகிறது.
இந்த தேர்வு எழுத வந்த ஒரு பெண் மெலிந்த உடல் அமைப்புடன் இருந்தார். ஆனால் உடல் தகுதிக்கு தேவையான 45 கிலோ எடையுடன் இருந்ததால் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று பெண் போலீசார் சோதனையிட்டனர்.
அந்தப் பெண் ஒரு ஜீன்ஸ் மீது 4 பேண்ட் போட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதலாக அணிந்திருந்த எடை 2.5 கிலோவாக இருந்தது. 43 கிலோ எடை மட்டுமே இருந்த அவர் உடல் எடை 45 கிலோவுக்கு காட்டுவதற்காக நான்கு பேண்டுகள் அணிந்து வந்திருந்தது தெரியவந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட பெண்ணை அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.





