ட்டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் GO BACK MODI ஹாஷ்டாக்..!
பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாபில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தனது முதல் டிஜிட்டல் பேரணியில் பங்கேற்பார் என பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ வெளியிட்டதை அடுத்து கோபேக் மோடி ஹேஸ்டெக் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
பிரதமரின் இந்த கூட்டத்திற்காக பஞ்சாப் லூதியானா பெட்கர் ஆகிய 18 சட்டமன்ற தொகுதிகளிலும் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கு முன் பிரதமர் மோடி கடந்த ஜனவரி 5ஆம் தேதி மாநில வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்க பஞ்சாப் சென்றிருந்த பொழுது பிரதமரின் வாகனம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
தேர்தலுக்கு முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வரும் நாட்களில் பல பேரணிகளில் உரையாற்ற உள்ளார்.





