--- --:--:-- --

ரேசன் கடைகளில் ஒரு நபருக்கு 2 இலவச மாஸ்க் வழங்கும் திட்டம்… நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி!!

346

மிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் நபர் ஒருவருக்கு 2 முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

 

இந்தியாவில் கொரோனா பரவல் உச்சகட்டத்தில் உள்ளது.நாட்டில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தின் திருப்பூர், நாமக்கல், திருவாரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி என ஒரு சில மாவட்டங்கள் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு விஸ்வரூபமெடுத்து வருகிறது.

 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கையாக முகக் கவசம் கட்டாயம் அணிவதும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் விதவிதமான டிசைன்களில் ரூ 5 முதல் பல நூறு ரூபாய் வரையிலான விலையில் மாஸ்க் விற்பனை சக்கை போடு போடுகிறது. ஆனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு மாஸ்க் வாங்க காசு செலவழிப்பதும் கூடுதல் செலவாக உள்ளது.

 

“இதனால், கொரோனா பரவிய காலம் முதல் இலவசமாக அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது போல், இலவசமாக மாஸ்க் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, நாளை முதல் ரேசன் கடைகளில், ஒவ்வொரு குடும்ப அட்டையிலும் பெயர் இடம் பெற்றுள்ள நபர்களுக்கு தலா 2 முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளன.”

 

இந்தத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை துவக்கி வைக்கிறார். இந்த மாஸ்க் விநியோகத்தில் முறைகேடுகளை தவிர்க்க, குடும்ப அட்டையை பாயிண்ட் ஆப் சேல்ஸ் கருவியில் பதிவிட்ட பின்னரே முகக் கவசங்களை வழங்க வேண்டும் என ரேசன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon