தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க 3 நாட்களுக்கு இலவச அனுமதி..!
ஷாஜகானின் நினைவு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு தாஜ்மஹாலை இலவசமாக சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முகலாய பேரரசர் ஷாஜகானின் 367 வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து வரும் 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் தாஜ்மஹாலை இலவசமாக சுற்றி பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொல்பொருள் ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தரைத்தளத்தில் உள்ள ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் கல்லறைகளை காண மக்கள் அவதிப்படுகின்றனர். கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பொது மக்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





