--- --:--:-- --

பள்ளி பேருந்தில் இருந்து கழன்று ஓடிய டயர்..!

3

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து டயர் கழன்று சாலையில் ஓடியதால் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

தாராபுரம் உடுமலை சாலையில் இருந்து பொள்ளாச்சி சாலையில் உள்ள பொன்னாபுரம் பகுதியை நோக்கி சென்ற விவேகம் மேல்நிலைப்பள்ளி பேருந்தின் டயர் திடீரென கழன்று ஓடியது. இதில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்த நிகழ்வின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள வாகனங்களை சோதனை நடத்தினர். தர சான்றிதழ் வழங்கிய பின்பு பயன்படுத்தப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon