பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி..!
மதுரையில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி நிதி நிறுவன அதிபரிடம் பணத்தை பறித்துச் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
நிதி நிறுவனம் நடத்தி வரும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சேர்ந்த பரமசிவம் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம கும்பல் 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் 12 லட்சம் ரூபாய் பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
அதனை உண்மை என்று நம்பிய பரமசிவம் ஐந்து லட்சம் ரூபாய் பணத்துடன் மதுரை சென்றுள்ளார். அப்போது போனில் தொடர்பு கொண்ட மோசடி கும்பல் போலீசார் கண்காணித்து வருவதால் தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே பரமசிவத்தை வரக்கூறியுள்ளனர்.
அங்கு சென்ற பரமசிவத்தை மடக்கி 4 பேர் 5 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு உரிய ஆவணங்களை காட்டி தல்லாகுளம் காவல் நிலையத்தில் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பணத்தை பறிகொடுத்த பரமசிவம் ஓடோடிச் சென்று தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறிய போது அங்கு அப்படி யாரும் வரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார் சதீஷ்குமார், முருக பாண்டி உள்ளிட்ட 4 பேரை கைது செய்து தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்







