காபூலில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம்..! 100 க்கும் மேற்பட்டோர் பலி..!
காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை முழுவீச்சாக செயல்படுத்திக் கொண்டு இருந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் குண்டு வெடித்தது.
இதனிடையே விமான நிலையம் அருகே இருந்த ஹோட்டலிலும் ஒரு பயங்கர குண்டு வெடித்தது. இந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் குழந்தைகள் உட்பட 90 ஆப்கானியர்கள் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களில் அமெரிக்க படையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் உட்பட 13 பேர் மரணித்து விட்டதாகவும் 15 பேர் காயமடைந்ததாகவும் அமெரிக்க ராணுவ தலைமை தெரிவித்துள்ளது.







