--- --:--:-- --

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் பூட்டா சிங் காலமானார்..!

7

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் பூட்டா சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். 86 வயதான அவர் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கடந்த நான்கு மாதங்களாக கோமாவில் சுயநினைவின்றி இருந்து வந்தார்.

 

இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்ம ராவ் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வகித்த சிங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். பின்னர் பீகார் ஆளுநராகவும் சில காலம் பதவி வகித்தார்.

 

பூட்டா சிங்கிற்க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon