--- --:--:-- --

நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு கொரொனா தொற்று..!

6

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு பெருந்தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெருந்தொற்று குறைந்து வருகிறது.

 

சென்னை மாநகராட்சி பகுதியிலும் 300க்கும் குறைவானவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் ஒரே நேரத்தில் 25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இதனிடையே சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் 600 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் நடத்திய பரிசோதனையில் 80 ஊழியர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொற்று இருந்ததால் 80 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 

மேலும் அந்த நட்சத்திர ஹோட்டலில் நடக்க இருந்த விழாக்கள் அனைத்தும் வருகிற 10-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon