--- --:--:-- --

ஆப்கானிஸ்தான் நாட்டில் மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக் கொலை..!

8

ப்கானிஸ்தான் நாட்டில் மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ளூர் வானொலி நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் பிஸ்மில்லாமிடில் என்ற நபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் உள்ளூர் வானொலி நிலையத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். பிஸ்மில்லாடில் மாகாணத்தில் சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வந்துள்ளார். புது வருடத்தின் முதல் நாளிலேயே பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் 6 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon