திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில், திருமுருகன்பூண்டி பகுதியில்…4450 குடும்பங்களுக்கு ரூ 22 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் தொகுப்பு
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருமுருகன்பூண்டி பேருராட்சி, அவிநாசி பேரூராட்சி மற்றும் அவிநாசி ஒன்றிய பகுதிகளில் வசிக்கும் 4450 ஏழை, எளிய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ. 500 மதிப்பில் ரூ 22 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.
முதல் நிகழ்வாக திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் மற்றும் ஏ.டி காலனியில் வசிக்கும் 1000 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்பட 11 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அணைப்புத்தூரில் 650 குடும்பங்களுக்கும் மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தலைமையில். மாவட்ட இணைச்செயலாளர் லதாசேகர் ஏற்பாட்டில், மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகர உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், அவிநாசி தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் பழனிசாமி, கோபால், ஒன்றிய மாணவரணி செயலாளர் ஏ.ஆர்.கே கார்த்திகேயன், பூண்டி நகர அம்மா பேரவை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பாசறை செயலாளர் கணேஷ், கூட்டுறவு வங்கி தலைவர் சண்முகசுந்தரம், இயக்குனர் மாரிமுத்து உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவிநாசி பேரூராட்சி பகுதியில் உள்ள 300 குடும்பங்களுக்கும், அவிநாசி ஒன்றியத்தில் வடக்கு பகுதியில் இருக்கும் புஞ்சை தாமரைக்குளம், முதலிபாளையம், தத்தனூர், புலிப்பார், போத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள தலா 500 குடும்பங்கள் என 2500 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவிநாசி ஒன்றிய சேர்மன் ஜெகதீசன், வடக்கு ஒன்றிய செயலாளரும், சேவூர் ஊராட்சி தலைவருமான சேவூர் வேலுசாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் தியாகராஜன், புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி தலைவர் சரவணன், புலிப்பார் ஊராட்சி தலைவர் செல்வி செல்வராஜ், போத்தம்பாளையம் ஊராட்சி தலைவர் சத்யா கந்தசாமி மற்றும் அ.தி.மு.க கழக மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில் போலீசார் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






