பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட சிறுத்தையின் தலையை மீட்ட வனத்துறை..!
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையின் தலை பாத்திரத்தில் மாட்டிக் கொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் துணை மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த பாத்திரத்துக்குள் புகுந்துள்ளது.
எதிர்பாரத விதமாக அங்கிருந்த பாத்திரத்தில் சிறுத்தை தலை சிக்கிய நிலையில் தலையை வெளியே எடுக்க முடியாததால் அங்கே இருந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் கால்களை கட்டி பாத்திரத்தை வெட்டி எடுத்து சிறுத்தையின் தலையை விடுவித்தனர்.
பின்னர் சிறுத்தை கூண்டுக்குள் அடைக்கப்பட்டு காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டது.





