தமிழ்நாட்டில் வெளிநாட்டு கொள்ளைக்காரத் தம்பதி
திருவாரூர் முத்துப்பேட்டையை தொடர்ந்து காரைக்குடியில் உள்ள மளிகை கடையில் வெளிநாட்டு தம்பதி கொள்ளையடித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கருப்பையா என்பவருக்கு அமலா ஸ்டோர் இன்று மளிகை கடை உள்ளது. இவரது கடைக்கு மாலை 5 மணி அளவில் ஒரு வெளிநாட்டு தம்பதி வந்துள்ளார் .
அப்போது கடை பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் செல்பி எடுப்பது போல் அந்த வெளிநாட்டு பெண் கவனத்தை திசை திருப்பியுள்ளார். இதற்கிடையே அந்த வெளிநாட்டு நபர் அந்த 2000 ரூபாய் நோட்டில் குறிப்பிட்டுள்ள சீரியல் ஏன் உள்ளதா என பார்க்க வேண்டும் என கல்லாவில் இருந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.
கடையில் இருந்த பெண் 2000 ரூபாய் நோட்டு இல்லை என்ற போதும் தொடர்ந்து அந்த நபர் வலியுறுத்தியுள்ளார். அந்தப்பெண் கலாவுக்கு அடியில் வைத்திருந்த பையை எடுத்துக் காட்டியுள்ளார். அதில் 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் இருந்த போதும் அப்பணத்தை தன் கையில் வாங்கி பார்த்துள்ளார். அப்போது அப்பெண்ணுக்கு தெரியாமல் 6,000 ரூபாயை திருடியுள்ளார் இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.





