--- --:--:-- --

“கொரோனாவே ஓடிப்போ!!”நாடு முழுவதும் 9 மணிக்கு தீபம் ஏற்றிய மக்கள்.. கூடவே வாண வேடிக்கையும்..! பிரதமர் மோடியின் அழைப்புக்கு ஏக ரெஸ்பான்ஸ்!!

ea496800-e870-4c88-aa60-0ba43f98b907

கொரோனாவுக்கு எதிரான போரில் நம் ஒற்றுமையை வெளிப்படுத்த, இரவு 9 மணிக்கு வீடுகளில் மின் விளக்கை அணைத்து 9 நிமிடங்களுக்கு தீபம், மெருகுவர்த்தி ஏற்றி ஒளி வெள்ளம் பாய்ச்ச பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததற்கு நாடு முழுவதும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. கூடவே பல இடங்களில் மக்கள் உற்சாகத்தில் வாண வேடிக்கையும் நடத்தினர்.

கொரோனா அச்சுறுத்தல் உலகை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நம் நாட்டிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த மார்ச் 20-ல் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது கொரோனா பரவாமல் இருக்க மக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர் மோடி, ஒரு நாள் முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க அழைப்பு விடுத்தார்.

அத்துடன் அன்று மாலை 5 மணிக்கு வீட்டு வாசல், பால்கனியில் நின்று , கொரோனாவுக்கு எதிராக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், துய்மை பணியாளர்கள், காவல் துறையினர், பத்திரிகை, ஊடகத்துறையினரை பாராட்டி கை தட்டியும் மணியோசை எழுப்பியும் அன்பை வெளிப்படுத்துங்கள் என அழைப்பு விடுத்தார். மோடியின் இந்த அழைப்புக்கு நாடு முழுவதும் பிரபலங்கள் முதல் சாமான்யர்கள் வரை செவிசாய்த்து சுய ஊரடங்கை கடைப்பிடித்தனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக நாம் பின்பற்றும் வழிமுறைகளை உலக நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன என்று பெருமிதம் கொண்டார். அத்துடன் நமது ஒற்றுமையை வெளிப்படுத்த இன்று இரவு 9 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அனைத்து விட்டு, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றி டார்ச் லைட் அல்லது மொபைல் போன் மூலம் ஒளிவெள்ளம் பாய்ச்சுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

கொரோனா வைரசை ஒழிக்க விளக்கு ஏற்றினால் தீர்வாகிவிடுமா? என பிரதமரின் அழைப்புக்கு விமர்சனங்கள் எழுந்தாலும், இன்று இரவு சரியாக 9 மணிக்கு நாட்டு மக்களின் பெரும் பகுதியினர் பிரதமரின் அழைப்புக்கு தலை வணங்குவது தீபங்களை வீடுகளின் முன் ஒளிரச் செய்தனர். அத்துடன் பல பகுதிகளில் தீபாவளி போல் வாணவேடிக்கையும் நடத்தினர். பிரதமர் மோடியும் தனது இல்லத்தில் ஆளுயர குத்துவிளக்கேற்றி வழிபாடு நடத்தினார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது சாலி கிராமம் இல்லத்தின் முன் தனது குடும்பத்தினருடன் தீபம் ஏற்றி, மோடியின் அழைப்பை உற்சாகமாக நிறைவேற்றினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon