முதன்முறையாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நற்சான்றிதழ்..!
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் அன்னதான கூடத்திற்கு சுகாதாரமான அன்னதான கூடம் என்று மத்திய அரசின் நற்சான்றிதழ் அளித்துள்ளது. மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூன்று வேலையும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இதற்காக உணவு சமைக்க கோயிலில் அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. அங்கு பின் பற்றப்படும் சுகாதாரத் துறைகள் உணவு வகைகளின் தரம் உணவு தயாரிக்கும் முறைகளின் அம்சங்களை ஆய்வு செய்ய மத்திய உணவு பாதுகாப்பு துறை சுகாதாரமான அன்னதான கூடம் என்று சான்றிதழளித்துள்ளது.
இந்த நற்சான்றிதழ் தமிழக நீதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள அழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உட்பட மொத்தம் 26 கோயில்களில் உள்ள அன்னதான கூடங்களுக்கு மத்திய அரசின் நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.






