டெல்லி துணை முதல்வருக்கு மார்ச் 4 வரை சிபிஐ காவல்..!
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை மார்ச் 4ஆம் தேதி வரை காலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லியில் புதிய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மார்ச் நான்காம் தேதி வரை சிபிஐ காவல் வழங்கப்பட்டுள்ளது.






