வானத்தில் இருந்து திடீரென விழுந்த ஆம்புலன்ஸ் விமானம்..!
அமெரிக்காவில் நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் விபத்திற்கு உள்ளானது. ஐந்து பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் நேகான மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டது.
விமானி புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமான விமானத்தை தேடும் பணி நடைபெற்றன. சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மாயமான அந்த ஆம்புலன்ஸ் விமானம் மலை பாங்கான பகுதியில் விழுந்த நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பிறகு மீட்பு குழுவினர் பிரிந்து சென்று பார்த்த பொழுது சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து ஆணையம் இது குறித்து தீவிரமான விசாரணை நடத்தி வருகிறது.






