2022ஆம் ஆண்டு வரை பட்டாசு வெடிக்க தடை..!
ராஜஸ்தானில் அடுத்தாண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும் விற்பனை செய்யவும் அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் கொரொனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் மூன்றாம் அலை எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு வெடி பொருட்கள் விற்பனை செய்யவும் தடை விதித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசு 2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.






