திடீரென இடிந்து விழுந்த 7 மாடி கட்டிடம்..!
இமாச்சல பிரதேசம் சிம்லாவில் 7 மாடி கட்டிடம் ஒன்று கட்ச் பகுதியில் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அருகிலிருந்த மற்றொரு கட்டடமும் சேதமடைந்தது.
ஆயினும் இந்த இரண்டு கட்டடங்களிலும் வசித்து வந்த சுமார் 10 குடும்பங்கள் முன்கூட்டியே வெளியேறி விட்டதால் உயிர் தப்பியுள்ளனர். பழைய கட்டிடங்களை ஆய்வு செய்து அங்கு வசிக்கும் குடும்பத்தினரை வெளியேற்றும் பணியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.







