பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரு விரல் சோதனை செய்யப்பட்டதாக புகார்..!
கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் விமானப்படை அதிகாரிக்கு இருவிரல் சோதனை செய்வதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவையில் விமானப்படை லெப்டினன்ட் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் விமானப்படை அதிகாரி அளித்த புகார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. விமானப்படை மருத்துவர்கள் தடை செய்யப்பட்ட இருவிரல் சோதனை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்த செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த தேசிய மகளிர் ஆணையம் இது தொடர்பாக இந்திய விமானப்படை தளத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
இருவிரல் சோதனை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் இந்திய மருத்துவ கழகம் 2014ஆம் ஆண்டு இதனை தடை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள மகளிர் ஆணையம் சோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளது.







