--- --:--:-- --

நாயை கண்டுபிடித்து தந்தால் ரூ.10,000 சன்மானம்! பாசத்தால் நாயின் உரிமையாளர் ஒட்டிய போஸ்டர்

10

திருவண்ணாமலை மாவட்டத்தில் காணாமல் போன நாயை கண்டு பிடித்து தருவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என நாயின் உரிமையாளர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். வந்தவாசி அடுத்த கில்கொடுங்களோர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார். கடந்த 12 ஆண்டுகளாக கலப்பின நாயை ஆசையாக வளர்த்து வந்துள்ளார்.

 

கடந்த 29 ஆம் தேதி உறவினர் வீட்டில் தங்கியபோது காணாமல் போனது அவரது நாய். அதனால் எங்கு தேடியும் கிடைக்காததால் நாயை கண்டு பிடித்து தருவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக சுற்றுவட்டாரத்தில் உள்ள 15 கிராமங்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon