--- --:--:-- --

நாளை உருவாகிறது நிசர்கா புயல்! தயார் நிலையில் உள்ள மாநில பேரிடர் மீட்பு படை!

9

அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தற்போது மும்பையில் தென்மேற்கு திசையில் 570 கிலோ மீட்டர் தொலைவிலும், குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

அவ்வாறு மாறும் பட்சத்தில் அதற்கு நிசர்கா என பெயரிடப்பட்டுள்ளது. புயலின் எதிரொலியாக மும்பை பெருநகர மும்பை புறநகர்ப் பகுதிகள் தானேரத்னகிரி உள்ளிட்ட பகுதிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

 

எந்த சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் மாநில பேரிடர் மீட்பு படை நிவாரண மற்றும் மறுசீரமைப்பு துறையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக உத்தவ் தாக்கரே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காணொலி காட்சி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply

Right Menu Icon