சிரியாவில் சண்டை தீவிரம்: 1,000க்கும் மேற்பட்டோர் பலி
சிரியாவில் அரசு படையினருக்கும், EX அதிபர் ஆசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே மீண்டும் சண்டை வெடித்துள்ளது. அசாத் ஆதரவாளர்களின் பகுதிக்குள் புகுந்து அரசு பாதுகாப்பு படைகள் 2 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதில் அப்பாவி மக்கள் 750 பேர் உள்பட இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடங்களில் மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.






