மகன் காலை காவலர்கள் உடைத்ததாக தந்தை வழக்கு..!
காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்காதீர்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தனது மகனை பொய்யான வழக்கில் கைது செய்து காவலர்கள் காலை உடைத்ததாக மதுரையைச் சேர்ந்த உலக ஜோதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரையில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட கோரி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சம்பந்தப்பட்ட கரிமேடு காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் பாதுகாப்பாக உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த காவல்துறை தரப்பு ஹார்ட் டிஸ்கில் இல்லை என பதிலளித்தது அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு இருந்தும் இவ்வாறு பதிலளிப்பது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி ஆணையர் அலுவலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து வைக்கும்படி உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





