--- --:--:-- --

தொடங்கிய வடகிழக்கு பருவமழை..!

4

மிழ்நாடு மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர், பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளார்களை சந்தித்த அவர் தென்மேற்கு அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இருப்பதாகவும் இதற்கு தேஜ் என பெயரிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

இந்த புயல் மிக தீவிர புயலாக மாறி ஏமன் ஓமன் கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon