மகளிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட தந்தை..!
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே பெற்ற மகளிடமே பாலியல் கொடுமையில் ஈடுபட்ட தந்தை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மூர்த்தி என்பவனின் மனைவியை 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்ட நிலையில் மகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மது போதையில் தனது 14 வயது மகளிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மூர்த்தியின் தாயார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.






