கிருஷ்ணகிரியில் கோர விபத்து..3 பேர் பலி..!
பொங்கல் பண்டிகையான இன்று துயர சம்பவம் நேரிட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 பேர் அதிவேகமாக முன்னே சென்ற காரை முந்த முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி சம்பவ இடத்திலேயே 3 பேரும் தூக்கி வீசப்பட்டு, துடிதுடிக்க உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





