--- --:--:-- --

அமைச்சர் அன்பில் மகேஷ் காரை வழிமறித்த விவசாயிகள்..!

1

பாபநாசம் அருகே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் காரை முற்றுகையிட்டு கரும்பு விவசாயிகள் அமைச்சரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்தனர்.

 

விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும், சர்க்கரை ஆலை வழியாக கட்டிட திறப்பு விழாவிற்காக வருகை தர இருந்த அமைச்சரை சந்தித்த விவசாயிகள் காத்திருந்தனர். பாபநாசம் காவலர்கள் இது குறித்து அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து அமைச்சர் விவசாயிகள் சங்கத்தை விவரிக்க சத்தியமங்கலம் வழியாக 10 கிலோமீட்டர் சுற்றி வந்துள்ளார். அமைச்சர் சுற்றி வருவதை அறிந்த விவசாயிகள் அவரை வரும் வழியிலேயே மறிக்க இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

 

திருவையாறு வழியே அமைச்சரின் கார் கடந்து சென்றதைப் பார்த்து காரை பின் தொடர்ந்து விரட்டி வந்தனர். வந்து கொண்டிருந்த விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்து அமைச்சரின் காரை மறைக்குமாறு கூறினார். விவசாயிகள் அமைச்சரின் காரை மறித்து முற்றுகையிட்டனர்.

 

காரில் அமர்ந்திருந்தபடி விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அமைச்சர் அன்பின் மகேஷ், ஆலையை தமிழக அரசே ஏற்று நடந்த உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளை சமாதானப்படுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon