--- --:--:-- --

40வது நாளை எட்டியுள்ள விவசாயிகளின் போராட்டம்..!

5

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 40வது நாளில் எட்டியுள்ள நிலையில் இன்று ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கடும் குளிரிலும் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர் தோல்வியில் முடிந்து வருகின்றன. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகள் முன்வைத்த 4 கோரிக்கைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

 

மேலும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் எனவும் அறிவித்தார். அதன்படி இன்று நடைபெறும் 7ஆம் கட்ட பேச்சுவார்த்தையின்போது குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

 

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடக்கும் அணிவகுப்பு மரியாதை முடிந்தபின் விவசாயிகள் சார்பில் டெல்லியை நோக்கி பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

குறைந்த பட்ச ஆதார விலை வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon