9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு..!
புதுச்சேரியில் 9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. கொரொனா காரணமாக புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் இன்று ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை பள்ளிகள் இயக்கப்படும் என்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன் மாணவர்கள் அனுமதிக்கப் படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் தங்களின் பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 3 மாதமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.






