--- --:--:-- --

நான்கு மாதங்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்..!

7

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் நான்கு மாதங்களாக தொடர்வதால் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

 

சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றன. விவசாயிகளுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு வன்முறை பேரணிக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்தியது.

 

இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 22 நாளாக நடைபெற்று வருகிறது. மேலும் 5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் நான்கு மாதங்கள் நிறைவடைந்ததையடுத்து மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

Leave a Reply

Right Menu Icon