--- --:--:-- --

பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் புற்றுநோயால் உயிரிழந்தார்..!

3

போக்கிரி, 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கோலா பாஸ்கர் புற்றுநோயால் மரணமடைந்தார். ஆந்திர மாநிலம் கோலா பாஸ்கர் சிவராகவன் இயக்கிய செவன் ஜி ரெயின்போ காலனி படம் மூலம் தமிழில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார்.

 

அதன்பின் புதுப்பேட்டை, மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய திரைப்படங்களில் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றினார். அதேபோல் விஜய் நடித்த போக்கிரி, வில்லு ஆகிய இரண்டு படங்களுக்கும் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

தன்னுடைய தொழிலில் தனித்தன்மையுடன் பணியாற்றிய கோலா பாஸ்கர் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

Right Menu Icon