30 கி.மீ மலையேற்ற போட்டியில் பங்கேற்க உள்ள நடிகை ரெஜினா..!
தனது 30வது பிறந்தநாளை முன்னிட்டு இமயமலையில் நடைபெறும் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கான மலையேற்ற போட்டியில் பங்கேற்க உள்ளதாக நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்.
வைல்டு வாரியர்ஸ் எனும் அமைப்பு சார்பில் டிசம்பர் 13 முதல் 30ம் தேதி வரை உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் நடைபெற உள்ள மலையேற்ற போட்டிகள் குறித்த விளம்பர நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரெஜினா தனது 30வது பிறந்தநாளை முன்னிட்டு போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.







