--- --:--:-- --

கொரொனாவுக்கு பயந்து ஒன்றரை வருடமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய குடும்பம்..!

6

திருப்பதியில் கொரொனாவுக்கு பயந்து ஒன்றரை வருடமாக வெளியே வராமல் ஒரு குடும்பமே வீட்டுக்குள் முடங்கிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

 

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பரவத் தொடங்கிய கொரொனா தொற்றுக்கு பயந்து கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளார்.

 

இந்நிலையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விவசாயிக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து தர அந்த பகுதி மக்கள் அவரிடம் கூறியுள்ளனர். ஆனால் அவர் கதவை திறக்க மறுத்து விடவே இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

 

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து வீட்டுக்குள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த 5 பேரையும் வலுக்கட்டாயமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 15 பேர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon