கொரோனா அச்சத்தால் மூலிகை மருந்தை உட்கொண்ட குடும்பத்தினருக்கு வாந்தி, மயக்கம்!
கொரொனா அச்சத்தால் மூலிகை மருந்தை உட்கொண்ட குடும்பத்தினருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குன்னத்தூர் பட்டியை சேர்ந்த முத்துக்கருப்பன், கவிதா தம்பதியர் தங்களது இளைய மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கொரொனா என எண்ணி மூலிகை மருந்தை கொடுத்துள்ளனர்.
மேலும் தங்களுக்கும் காய்ச்சல் பரவாமல் இருக்க மூலிகை மருந்தை மூத்த மகனுக்கு கொடுத்து விட்டு தாங்களும் உட்கொண்டனர். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்படவே 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிற நிலையில் இளைய மகனான விஷ்வா மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.







