எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போது மருத்துவரை போலீசார் கைது செய்தனர். சின்னமனூர் அடுத்த எரசக்கநாயக்கனூர் ஊரை சேர்ந்தவர் சலீம் குமார் ஹோமியோபதி படித்த இவர் வீட்டின் கீழ்த்தளத்தில் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது.
இதனால் அங்கு சென்று தேனி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சரஸ்வதி ஆய்வு செய்தார். அப்போது எம்பிபிஎஸ் படிக்காமல் சலீம் குமார் பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வரவழைக்கப்பட்ட சின்னமனூர் போலீசார் போலி மருத்துவர்களின் குமாரை கைது செய்தனர் அவரிடமிருந்து மருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.





