கோவையில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையில் பணியாற்றி வரும் 51 பேருக்கு கொரொனா..!
கோவையில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் பணியாற்றி வரும் 51 பேருக்கு கொரொனா தொற்று பரவியதால் தொற்று ஏற்படும் வகையில் செயற்பட்டதாக கடையின் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூறடி சாலையில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் 90 பேரிடம் நடத்திய பரிசோதனையில் 51 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று ஏற்பட காரணமாக இருந்த மேலாளர் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் நகை கடைக்கு சென்று வந்தவர்கள் அனைவரும் கொரொனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.







