கடையில் விற்கப்பட்ட காலாவதியான கூல்ட்ரிங்ஸ்..!
திருவள்ளூரில் காலாவதியான கூல்ட்ரிங்ஸ் குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் புகார் அளித்த நிலையில் காவலர்கள் புகார் முறையாக விசாரிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் பெரிய குப்பம் பகுதியைச் சேர்ந்த பாக்யா மதன்குமார் தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு டாடா குளுக்கோஸ் கூல்ட்ரிங்ஸ் வாங்கி கொடுத்துள்ளனர். கூல்ட்ரிங்ஸ் காலாவதியானது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து கடை ஊழியரிடம் கேட்ட பொழுது முறையாக பதில் அளித்த நிலையில் பாக்கியம் – மதன்குமார் காலாவதியான கூல்ட்ரிங்ஸ் பாட்டிலோடு திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் புகார் முறையாக விசாரிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.





