--- --:--:-- --

சென்னையில் பெண்களுக்கு பிரத்யேக பிங்க் பேருந்து சேவை தொடக்கம்..!

1

சென்னை நந்தம்பாக்கத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கான பிரத்யேக பிங்க் பேருந்து சேவையையும் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலை வலுப்படுத்தும் நோக்கத்தில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரு நாட்கள் நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

அப்போது மகளிர்களுக்கு என பிரத்யேக பிங்க் நிற பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரு வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகள் விதம் ஐந்து வழித்தடங்களில் 10 பிங்க் நிற பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவிலேயே வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். புதிதாக எந்த நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்க முன் வந்தாலும் இதன் மூலம் பெண்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்பதை தான் நான் கேட்கும் முதல் கேள்வியாக இருக்கும் என்றார்.

 

மேலும் திமுக அரசிலும் பெண்களின் சம பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மகளிர் விடியல் பயணம், புதுமை பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தோழி விடுதிகள், காலை உணவு திட்டம், TN RISE என பல திட்டங்களை உருவாக்கி உள்ளோம். மாதம் ரூ.1000 உரிமைத்தொகை என யாரும் செய்யாத திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

Right Menu Icon