--- --:--:-- --

ரமலான் அன்று நடைபெற இருந்த தேர்வு தேதிகள் மாற்றம்..!

2

மே 13, 15 இல் நடைபெற இருக்கும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ரமலான் அன்று நடைபெற இருந்த சிபிஎஸ்சி தேர்வு தேதியை மாற்றக் கோரி மத்திய கல்வி துறை அமைச்சருக்கும் சிபிஎஸ் இயக்குனருக்கும் மதுரை மக்களவைத் தொகுதி எம்பி வெங்கடேஷ் கடிதம் ஒன்றும் எழுதியிருந்தார்.

 

இதையடுத்து ரமலான் அன்று நடக்கவிருக்கும் சிபிஎஸ்சி தேர்வு தேதிகளை மாற்றுவதற்கான கோரிக்கையை பரிசீலனை செய்யப்பட உள்ளது என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மே 13, 15 இல் நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மாற்றப்பட்டுள்ளன.

 

அதன்படி சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு மே 21-ம் தேதியும், பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் ஜூன் இரண்டாம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon