--- --:--:-- --

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடி பொருட்களுடன் நின்றிருந்த காரின் உரிமையாளர் திடீர் மரணம்..!

3

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடி பொருட்களுடன் நின்றிருந்த வழக்கில் திடீர் திருப்பமாக காரின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடி பொருட்களுடன் மர்ம கார் நின்றிருந்தது.

 

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த கார் உரிமையாளர் விக்ரோ பகுதியை சேர்ந்தவர் என்பதும் கார் திருடப்பட்டு அம்பானி வீட்டில் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

 

சிசிடிவி கேமிராவில் முகமூடி அணிந்த நபர் நள்ளிரவில் அம்பானி வீட்டின் அருகே காரை நிறுத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் காரின் உரிமையாளர் திடீரென இறந்துள்ளார்.

 

இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதால் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon