ஆணவத்தோடு பேசியவர் இபிஎஸ்: RS பாரதி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என ஆணவத்தோடும், அலட்சிய மனப்பான்மையோடும் பேசியவர் தானே நீங்கள் என EPS-ஐ நோக்கி RS பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அஜித்குமார் வழக்கில் அதிமுக துணை நிற்கும் என EPS கூறியிருந்தார். இந்நிலையில், உங்களின் கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்பமாட்டார்கள், நீதியை நிலைநாட்ட CM ஸ்டாலின் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





