ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை அடையாறு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 500 மீட்டர் தூரம் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு விழா சென்னை அடையாறில் நடைபெற்றது.
இதற்காக வந்த முதலமைச்சர் ஸ்டாலின், சாலையில் இறங்கி சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்றார். அப்போது, சாலையின் இரண்டு புறங்களிலும் திரண்ட மக்கள் உற்சாக வரவேற்பு தந்தனர். முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்தும், கை குலுக்கியும் மகிழ்ந்தனர்.
சாலையில் நின்ற பெண் ஒருவர் தன் கைக்குழந்தையை முதலமைச்சர் கையில் கொடுத்தார்.
அந்த குழந்தைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் சூட்டி 500 ரூபாய் பரிசாக வழங்கினார். பின்னர், மாநிலம் முழுவதும் 208 நகர்ப்புர நல வாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை, சென்னை அடையாறில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் திறந்து வைத்தார்.





