--- --:--:-- --

சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா கொரொனாவால் உயிரிழப்பு..!

7

ந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா கொரொனா காரணமாக உயிரிழந்தார். 1927ஆம் ஆண்டு பிறந்த பகுகுணா 1970ஆம் ஆண்டுகளில் இமயமலை காடுகளைப் பாதுகாக்கும் வகையில் சிப்கோ இயக்கத்தை தொடங்கினார்.

 

94 வயதான பகுகுணாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் ரிஷிகேசியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சுந்தர்லால் பகுகுணாவின் பணிகளை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி யுள்ளது. பகுகுணா மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon