--- --:--:-- --

மணிகண்டன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!

6

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

திருமணம் செய்து கொள்வதாக கூறி சேர்ந்து வாழ்ந்து விட்டு ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார். மூன்று முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

 

இதுகுறித்து மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது தலைமறைவாக இருந்த மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

 

தன்னை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்திலேயே நடிகை புகார் அளித்து இருப்பதாக அதில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த நடிகை நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்தார்.

 

அது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஆட்சேபனை மனுவை ஏற்றுக்கொண்டு மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Right Menu Icon