--- --:--:-- --

28ல் ராகுல் சேலம் வருகை! மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பிரசாரம்

ragul stalin

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் 28ம் தேதி சேலத்திற்கு வருகை தரவுள்ளார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இணைத்து பிரசாரம் செய்கிறார்.

 

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு நாட்கல் குறைவாக உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. வாகனங்களில் சென்றும், வீதி வீதியாகவும் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோவை மண்டலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். மேலும் தென் மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார். தற்போது மீண்டும் அவர் தமிழகம் வர உள்ளார். அவர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்ய இருக்கிறார்.

 

சேலத்தில் வரும் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

 

இந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக, தமிழக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon