எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!
இரண்டாம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதியவர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த முதியவர் திடீரென மயக்கம் அடைந்தார்.
அவரது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தாங்கிப் பிடித்து அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றினர்.





